Search This Blog

Tuesday, September 7, 2010

Oil bath

அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளித்தே ஆகணுமா...? அதனால் அப்படி என்னதான் பயன்?சித்த மருத்துவர் திருநாராயணன்:“சித்த - ஆயுர்வேத மருத்துவங்களில் எண்ணெய் தேய்த்தலுக்கு மருத்துவ ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் உண்டு. ஒரு சிலருக்கு உடலில் சூடு (ஒரு வகையான பித்தம்) அதிகமாக இருக்கும். அதைத் தணிக்க, சந்தனாதி தைலத்தைப் பூசுவது நல்ல பலன் அளிக்கும். அதேபோல வாதத்தைப் போக்க சுக்குத் தைலமும் கபத்தை நீக்க பூண்டும் மிளகும் சேர்த்துத் தயாரிக்கப் பட்ட எண்ணெயும் பயன்படுத்தலாம். இவை எல்லாவற்றையும்விட நல்லெண்ணெய் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாளாவது உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக் குளித்தால், நமது சருமத்துக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் நல்லெண்ணெயில் உள்ள sesamin நமது சருமத்தை இளமையாக வைக்க உதவும். சூரியனின் வெப்பம் நமது சருமத்தைத் தாக்குவதால் வரக் கூடிய தோலின் வறட்சித் தன்மை மற்றும் வயது முதிர்ந்த தன்மையை நல்லெண்ணெய் போக்கிவிடும்.”

No comments: