Search This Blog

Tuesday, November 16, 2010

Madras eye - Padigapaneer

செல்விராணி, கும்பகோணம்
கண் பராமரிப்பில் படிகாரம் ரொம்ப உப யோகமானது என என் தோழி சொல்கிறாள். இது உண்மையா?
சித்த மருத்துவர் நாராயணன்:
‘ ‘ஆம். உங்கள் தோழியின் கூற்று சரியே. கண் பராமரிப்பில் படிகாரம் சிறந்த மருத்துவப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதை ஒரு anti bacterial agent என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். எந்த விதமான காயங்களையும் ஆற வைக்கக் கூடிய ஆற்றல் படைத்தது படிகாரம். குறிப்பாக, கண்களில் ஏற்படும் மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுகளுக்குப் படிகாரம் ஒரு சிறந்த மருந்து. படிகாரத்தைப் பொடி செய்து பன்னீரோடு கலந்து அதை ஐ ட்ராப் போல கண்களில் போட்டுக் கொண்டு வந்தால், மெட்ராஸ் ஐ குணமாகும். கண்களில் ஏற்படும் புரை பரவாமல் இருக்கவும் இந்தப் படிகாரம் உதவி புரிகிறது.
சேகர், கூடலூர்
கொசுக்களின் தொல்லை அதிகமாக எங்கள் வீட்டைச் சுற்றி இருக்கிறது. இயற்கையான முறையில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
“உங்கள் வீட்டைச் சுற்றி முதலில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசுக்கள் உற்பத்தியாவதும், தங்கு வதும் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான். உங்கள் வீட்டைச் சுற்றித் தேங்கி இருக்கும் தண்ணீரில், மண்ணெண்ணெய் தெளியுங்கள், லெமன் க்ராஸ் எண்ணெய் கிடைத்தாலும் தெளிக்கலாம். இவை கொசுக்களை ஒழித்து விடக்கூடிய தன்மை வாய்ந்தது. கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலையையும், citronella எண்ணெயையும் கலந்து அந்த ஆவியைக் கொசுக்கள் இருக்கும் இடத்தில் காட்டினால், கொசுக்கள் வராது.”

No comments: