Search This Blog

Thursday, May 19, 2011

நூல் வெளியீடு



மூலிகை மருத்துவர் திரு.குன்றத்தூர் ராமமூர்த்தி எழுதியுள்ள 'எளிய மருந்து இனிய வாழ்வு' என்ற நூல் அண்மையில் பாரம்பரிய மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் வைத்ய. உஸ்மான் அலி அவர்களால் வெளியிடப்பட்டது. கல்பாக்கம் சித்த மருத்துவ மன்றத்தில் நடை பெற்ற எளிய நிகழ்ச்சியில் இந்நூலின் முதல் பிரதியை மன்றத் தலைவர் திரு. சுப்ரமணியன் பெற்று கொண்டார் . தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சரும் சித்த மருத்துவ ஆர்வலருமான பேராசிரியர் திரு. அன்பழகன் இந்நூலிற்கு சிறந்த அணிந்துரை வழங்கி ஒவ்வொருவர் இல்லத்திலும் இந்நூல் கண்டிப்பாக இருத்தல் வேண்டும் என்றும் , இதனை கடைபிடித்து வாழ்ந்து வந்தால் நோய் இல்லா இனிய வாழ்வு அனைவருக்கும் சாத்தியம் என்றும் தெரிவித்து உள்ளார். பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையம் போற்றுதலுக்கு உரிய இப்பணியை மேற்கொண்ட மூலிகை செம்மலை மனதார வாழ்த்துகிறது.