எனக்கு வயது முப்பது. என் பாதத்தில் உள்ள பித்த வெடிப்பு பெரும் மன இறுக்கத்தைக் கொடுக்கிறது. ஏன் பாத வெடிப்பு ஏற்படுகிறது? இதற்குப் பாரம்பரிய மருத்துவத் தீர்வு என்ன?
சித்த மருத்துவர் திரு நாராயணன்:
பித்தவெடிப்பு அல்லது பாதவெடிப்புத் தோன்ற முக்கியமான காரணங்கள்.... ஒன்று அதிக நேரம் தண்ணீரில் நிற்பது. இரண்டாவது, கரடுமுரடான தரையில் நடப்பது. மூன்றாவது, சேற்றில் அதிக நேரம் காலை வைப்பதுதான். துணி துவைக்கப் பயன்படுத்தும் சோப்புகளில் உள்ள கெமிக்கல்ஸினால் சிலருக்குக் கைகளில் வெடிப்பு வரும். அதுபோலவே, அதே கெமிக்கல்ஸ்கள் காலில் படுவதாலும் வெடிப்புகள் தோன்றும். தரமான சோப்பைப் பயன்படுத்திப் பாதத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். குளித்து முடித்த உடன் உலர்ந்த டவலால், பாதத்தை நன்றாகத் துடைத் திட வேண்டும். முடிந்தவரை பாதத்தை உலர்வாக வைத்துக்கொள்வது நல்லது. ‘திரிபலா சூரணம்’ (கடுக்காய், நெல் லிக்காய் தான்றிக்காய்) என்ற ஒரு சூரணத்தைக் கொண்டு பாதத்தைத் தேய்த்துச் சுத்தம் செய்து வந்தால், பித்தவெடிப்பில் உள்ள புஞ்சை அழிந்து, தோலுக்கு மிருதுவான தன்மை கிடைக்கும். அடுத்து, கிளிஞ்சல் மெழுகு என்று அழைக்கப்படும் (அதாவது கிளிஞ்சல் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும்) க்ரீமைத் தடவி வருவதால் பாதத்தை மிருதுவாக்கிப் பித்தவெடிப்பைப் போக்கும்
No comments:
Post a Comment