மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நவம்பர் ௧௪ (14) முதல் ௧௬(16) வரை மூன்று நாட்கள் சுவடியியலைப் பற்றிய பயிலரங்கம் நடத்தியது. இப்பயிலரங்கத்தில் பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையத்தின் சுவடியியல் வல்லுநர் வித்வான்.சீனிவாசன் அவர்கள் சுவடிகளில் எழு தப்பட்டுள்ள எழுத்து வடிவங்களை இன்றைய தமிழில் எழுதுவது குறித்து விளக்கி மருத்துவச் சுவடிகளை உடனடியாக படியெடுத்து, பொழிப்புரை கொடுத்து பதிப்பிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். Dr. ராஜ் குமார் இம்மூன்று நாள் பயிலரங்கிலும் பங்கேற்று, இறுதி நாளில் சுவடிகளை சேகரிப்பது, செம்மை ப்படுத்துவது, மின்னகல் செய்வது, பராமரிப்பது ஆகியவற்றில் ஏற்படும் நடைமுறைச்சிக்கல்களை தமது அனுபவத்தின் அடிப்படையில் எடுத்து உரைத்தார். மேலும் சித்த மருத்துவ சுவடிகளை படிக்க, பதிப்பிக்க சித்த மருத்துவர்களுக்கு மொழி புலமையும், சுவடிகளை வாசிக்கும் பயிற்சியும் அவசியம் எனவும் வலியுறுத்தினார். பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையம இப்பணியினை மேற்கொள்ள தயார் எனவும் தெரிவித்தார்.பயிலரங்கை செவ்வனேமேற்கொண்ட Dr.சத்தியராஜேஸ்வரன் மற்றும் Dr. மீனாக்ஷி சுந்தர மூர்த்தி நன்றிக்குரியவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment