பாரம்பரிய வைத்தியர்கள் இன்றளவும் கிராமப்புறங்களில் நோய் நீக்கும் சேவை புரிந்து வருகின்றனர். எல்லா மருத்துவர்களும் எல்லா நோய்களுக்கும் மருத்துவம் செய்யாவிட்டாலும் கூட மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று இருக்கிறார்கள். மாறி வரும் தற்கால சூழ்நிலையில் ஏற்படும் நோய்களுக்கும், இவர்கள் வாழும் பகுதியில் கிடைக்கும் தாவரங்களை கொண்டு சிகிட்சை செய்வதற்கான புத்துணர்வு பயிற்சி 11,ஆகஸ்ட் 2012, அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் அருகில் உள்ள கொளத்தூர், கருங்கலூர், விவேகானந்தா கல்வி நிலையத்தில் சென்னை பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையம் நடத்துகிறது. சேலம் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பாரம்பரிய வைத்தியர்கள் இதில் கலந்து கொள்வார்கள். இதுவரை அழைப்பிதழ் கிடைக்க பெறாதவர்கள் 9444018158/044-22600440/22533399 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். புத்துணர்வு பயிற்சி இந்திய அரசின் ஆயுஷ் துறை திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment