லதா ஹரிக்ருஷ்ணன், ஜமீன் பல்லாவரம்
பொதுவாகவே ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் புஷ்டியாக ஏதாவது வழிமுறைகள் சித்த வைத்தியத்தில் இருக்கிறதா?
டாக்டர் நாராயணன் :
முதலில் ஒல்லியாக இருப்பவர்கள் குழந்தைகளாக இருந்தாலும் சரி, 20, 25 வயதுடைய இளம் வயதினர்களாக இருந்தாலும் சரி, அவர்களது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க, பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். தேத்ரான் கொட்டை லேகியம் என்ற ஒரு வகை லேகியம் கொடுக்கலாம். தேத்ரான் கொட்டையைச் சாதாரணமாக, தண்ணீரைச் சுத்தப்படுத்த பயன்படுத்துவார்கள். இந்த லேகியத்தைக் குழந்தைகளாக இருந்தால், 1 கிராம் முதல் இரண்டு கிராம் தினமும் உட்கொள்ளலாம், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் 2 முதல் 5 கிராம் வீதம் இந்த லேகியத்தைச் சாப்பிடலாம். அதேபோல அஷ்வகந்தி லேகியம், நெல்லிக்கா லேகியம் (ச்யவனப்ராஷ்) சாப்பிடுவதும் நல்ல பலனைத் தரும்."
No comments:
Post a Comment