75 வயதை நெருங்கிய என் தாயாருக்கு, குளிரைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார். அவருக்கு எந்த மாதிரியான உணவு வகைகளை இந்தக் குளிர் காலத்தில் சேர்த்துக் கொள்வது நலம் அளிக்கும்?
சித்த மருத்துவர் பத்மப்ரியா :
“இந்தக் குளிர் காலம் என்பது இரவு நீண்ட நேரமும், பகல் என்பது குறைவாகவும் உள்ள ஒரு காலம். அதிகாலையில் பசி எல்லோருக்குமே அதிகமாக இருக்கும். நல்ல சக்தி கொடுக்கக் கூடிய வெல்லம் கலந்த கடலை உருண்டைகள் நமக்குக் குளிரைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியைக் கொடுக்கும். சுக்கு, மிளகு சேர்த்து செய்த குழம்பு வகைகள், மற்றும் தூதுவளை, கொள்ளு சேர்த்த சூப் வகைகள் நம் உடம்பில் கபம் ஏறாமல், உடம்புக்குத் தேவையான சூட்டைக் கொடுக்கும். இந்தப் பனிக்காலத்தில், அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு தொந்தரவு தொண்டை கட்டுவது. இதைப் போக்க, பத்து மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து சாப்பிட்டால் மார்கழி பனியை ரசிக்கலாம்.”
No comments:
Post a Comment